(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாராட்டு கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (12) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி தலைமையில் நடைபெற்றது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உட்பட கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார், பழைய மாணவியர் சங்கம் மற்றும் சமூகவியலாளர் எம்.ஏ.எம். ஹஸ்மத்கான் ஆகியோரின் அனுசரணையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இம்முறை 05 ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுபுள்ளிக்கு மேல் பெற்ற முகம்மது பஸ்லின் பௌஸ் அஹமட் (147), முகம்மது பைரூஸ் முகம்மது அப்னான் (141) அஜ்வாத் பாத்திமா அஸா (137) ஆகிய 03 மாணவர்களுடன், பல்கலைக்கழகம் தெரிவான மூன்று மாணவர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.|
சதகதுல்லா மஸியா 3ஏ (கொழும்பு பல்கலைக்கழகம்), முகம்மது ஹில்மியாஸ் பஸ்ரா 3ஏ (கிழக்கு பல்கலைக்கழகம்), முகம்மது பாயிஸ் முகம்மது பாதில் 2ஏ,1 பீ (தென் கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகிய மூவரும் கௌரவிக்கப்பட்டனர்
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
