(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் வருடாந்த கண்காட்சி இம்முறை பாடசாலையின் வளாகத்தில் அதிபர் எஸ்.எம் அரூஸியா உம்மா தலைமையில் கடந்த புதன் கிழமை (10) சிறப்பாக இடம்பெற்றது.
கண்காட்சி நிகழ்வின் பிரதம அதிதியாக கற்பிட்டி பிரதேச சபையின் பாலர் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.எச்.ஆர்.பீ ஜயமஹா கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.
சிறார்களின் திறமை மற்றும் ஆற்றல்கள் கழிவுப் பொருட்களை கொண்டு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதுடன், பாலர் பாடசாலையின் ஆசிரியர்களான எம்.எப் திப்னா பானு, ஏ.எப் அம்னா, எஸ் எப் சுமையா, ஏ.எஸ்.எப் றீஹா ஆகியோரின் பங்களிப்புடன் பெற்றோர்களின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு மிகவும் நேர்த்தியாக கண்காட்சி பொருட்கள் உருவாக்கப்பட்டிருந்தது.
இதேவேளை நிகழ்வின் கௌரவ அதிதியாக கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் செயலாளர் எம். நாசர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

