இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2025 ஆகஸ்ட் 11 ஆம் திகதி இரவு கற்பிட்டி திகலி பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின்போது நாட்டிற்குள் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பெரும் தொகை கடத்தல் பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
(379) கிலோ கிராமை விட அதிகமான பீடி இலைகள், (6000) வெளிநாட்டு சிகரெட்டுகள், (2,812,00) மருந்து மாத்திரைகள் மற்றும் (1291) மருந்து ஊசிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, கற்பிட்டி திகலி பகுதியில், கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள ஒரு சந்தேகத்திற்கிடமான வீட்டை சோதனையிட்டபோதே குறித்த கடத்தல் பொருட்கள் மீற்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டியின் ஏத்தாலை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மீற்க்கப்பட்ட பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மருந்து மாத்திரைகள் மற்றும் மருந்து ஊசிகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கலற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
