கல்பிட்டி நிருபர் – சஜாத்
குளியலறை பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை ஒன்று தண்ணீர் நிரம்பிய பக்கட்டுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று கல்பிட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்பிட்டி, முசல்பிட்டி பகுதியில் குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
பெற்றோர்கள் வீட்டில் இருந்த சமயம் குழந்தை குளிக்கும் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், தண்ணீர் நிரம்பிய பக்கட்டுக்குள் முகம் குப்புற தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையின் உடல் தற்போது கல்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்பிட்டி பொலிஸார் மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.


