கல்முனை செய்தியாளர்
SDG அமைப்பின் இளைஞர் தூதுவர்களுக்கான உத்தியோகபூர்வ நியமனம் வழங்கும் நிகழ்வும் ஏனைய நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமும் நேற்று (28) கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் Kalmunai Friendly Guiders பவுண்டேசனின் ஸ்தாபக தலைவரும், சிரேஷ்ட இளம் ஊடகவியலாளரும், சர்வதேச மனித உரிமை அமைப்பின் சர்வதேச இயக்குனருமான ஏ.எஸ்.எம்.அர்ஹம் அவர்களுக்கு ஆஸ்திரேலியா நாட்டுக்கான இளைஞர் தூதுவராக உத்தியோகபூர்வ நியமனம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதன்மூலம் தனது கல்முனை மண்ணிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து மண்ணையும், பெற்றோர்களையும் கெளரவத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.
மேலும் ஏனைய நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
