உயர்தர தொழிற்கல்விப் பாடப் பிரிவின் கீழ் தரம் 12இற்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த வருடம் முதல் 608 பாடசாலைகளில் தொழிற்கல்விப் பிரிவு செயல்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தப் பாடப்பிரிவிற்கு மாணவர்களைச் சேர்க்கும் போது, க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையத் தவறியது கருத்திற்கொள்ளப்படாது என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதற்காக, அனுமதிக்காக எதிர்பார்க்கப்படும் பாடசாலை அதிபர்களிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.