கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது இளைஞர் மீது கோல் கம்பம் சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.
நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (20) சக வீரர்களுடன் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த வேளையிலேயே கோல் காப்பாளராக நின்ற இளைஞர் மீது கம்பம் சரிந்து விழுந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.