கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (07.04.2025) ஈடுபட்டனர்.
கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 03ம் திகதி யாழ்ப்பாணத்தில் குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டமைக்கு காரணம் குறித்த பிரிவின் பொறியியலாளர் தான் என சில சமூக வலைத்தளங்களிலும், இணையத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்த நிலையில், அவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சம்பவம் உண்மைக்கு புறம்பானது எனவும் திணைக்களத்தை அவமதிக்கும் செயல் என தெரிவித்து, உத்தியோகத்தர்கள் நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்
