கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கேரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பரந்தன் குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 20.7 கிராம் ஐஸ் மற்றும் 5.75 கிராம் ஹெறோயின் என்பன கிளிநொச்சி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
மேலும் இதனுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நான்கு கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்
