கிளிநொச்சி, அக்கறையான் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கராயன் பிரதான வீதியில் 5வது மைல் கல் அருகில் இன்று 10.08.2025 இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இயக்கச்சியை சேர்ந்த சிரிகரன் சுபாங்கி 44 வயதுடைய குடுப்ப பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையை கிளிநொச்சி பொலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கலைநாட்சி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
