டிற்வா பேரிடர் மற்றும் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ35 பிரதான வீதியில் 11 ஆம் மைக்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலம் கடும் வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில் சேதமடைந்த பாலத்தை புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவம், வீதி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து துரித கதியில் இயங்கி புனரமைப்பு பணிகள் நேற்றைய தினம் நிறைவு பெற்றது.
குறித்த பாலத்தினை புனரமைப்புக்க இலங்கை வந்த இந்திய இராணுவத்தினர் மற்றும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து நேற்றைய தினம் 20.12.2025 பாலத்தின் அபிவிருத்தி பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளனர்.
பாலத்தின் நிறைவுப்பணிகளை இந்திய துணைத் தூதர் சாய் முரளி நேரில் சென்று பார்வையிட்டதுடன், எதிர்வரும் தினங்களில் பொதுமக்கள் பாவனைக்காக பாலம் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.




