கிளிநொச்சி கணேசபுரம் முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வாய்க்கால் ஒன்றில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி ஜெயந்தி நகரைச்சேர்ந்த சோமு கஜேந்திரமூர்த்தி என்ற நபரே சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் சடலத்திற்கு அருகில் வாய்க்காலில் விழுந்த நிலையில் காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
சாலமாக மீற்க்கப்பட்ட 37 வயதான 03 பிள்ளைகளின் தந்தையின் மரணம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
