கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கம் நடாத்தும் 2024ம் ஆண்டுக்கான எழுத்து தேர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி நடாத்தப்பட உள்ளது.
3000ற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவுள்ள குறித்த தேர்வு 45ற்கும் மேற்பட்ட நிலையங்களில் நடாத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்க வாழ்நாள் தலைவர் வே. இறைபிள்ளை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்தார்.
மேலும் பாடசாலை மாணவர் ஒருவரை திருக்குறளின் மூலம் தாய் நாட்டிற்கும் தாய்மொழிக்கும் சமூகத்திற்கும் நல்ல பிரஜையாக உருவாக்குவதே இதன் நோக்கம் எனவும், குறித்த எழுத்து தேர்வானது. அ,ஆ,இ,ஈ,உ,ஊ என்ற பிரிவுகளில் தரம் 2 தொடக்கம் 13 வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கிளிநொச்சி செய்திகளுக்காக ஆனந்தன்