டித்வா பேரிடர் காரணமாக கடந்த 28.11.2025 அன்றைய தினம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ35 பிரதான வீதி 11 ஆம் மைக்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலம் கடும் பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக கிளிநொச்சி முல்லைதீவு மாவட்டங்களுக்கான போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதன் காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவுக்கான போக்குவரத்து வட்டக்கச்சி ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கிளிநொச்சி முல்லைத்தீவுக்கான போக்குவரத்து மீண்டும் இன்று 23.12.2025 குறித்த பாலத்தின் ஊடாக போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாலத்தின் புனரமைப்பு பணிகள் துரித கதியில் நிறைவடைந்ததை அடுத்து 25 நாட்களின் பின்னர் மீண்டும் இவ்வீதி ஊடான போக்குவரத்து தொடங்கியுள்ளதால் மக்கள் தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இந்திய இராணுவத்தினர் மற்றும் இலங்கை இராணுவத்தினர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து துரித கதியில் பாலத்திற்கான நிர்மாணப்பணிகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பாலத்தின் ஊடாக பயணிப்பவர்கள் வீதி சமிக்கைகளை பின்பற்றி அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தாது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இவ்வீதி ஊடாக பயணத்தினை மேற்கொள்ள வேண்டுமென வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் காணொளி மூலம் திறந்து வைத்திருந்தார்.




