கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (07) நடைபெற்றது.
இச் சந்திப்பின்போது அண்மைய வெள்ள அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேசத்தை மீண்டும் முன்னேற்றுவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் கிராமங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இவ்விடயங்களுக்கு தேவையான நிதிகளினை ஒதுக்கீடு செய்து, மறுசீரமைப்புப் பணிகளை விரைவில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த பணிகளை விரைவில் முன்னெடுக்க சகல ஆயத்தங்களும் செய்வதாக ஆளுநர் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில், ஏறாவூர் நகர சபை தவிசாளர் எம்.எஸ் நழீம் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.



