நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவை சிறைச்சாலை அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
ஈ-விசாக்கள் வழங்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை அமுல்படுத்தத் தவறியமையால் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் கடந்த செப்டம்பர் மாதம் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த மனுக்கள் இன்று (22) உயர் நீதிமன்றத்தில் அழைக்கப்படவுள்ள நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹர்ஷ இலுக்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.