ஜூட் சமந்த
புத்தளம், தில்லடிய பகுதியில் உள்ள அடபனாவில்லு பகுதியில் வசிக்கும் சிலர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி புத்தளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 17 ஆம் தேதி மதியம் குளவித் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. புத்தளம், தில்லடிய பகுதியில் உள்ள அடபனாவில்லு, அல்காசிம் வீட்டுத்திட்ட வளாகத்தில் வசிக்கும் சிலர் இந்த குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
குளவித் தாக்குதலுக்கு உள்ளான நபர்களை மீட்கச் சென்ற பலரும், மற்றும் வீதியில் பயணித்த ஒரு சிலரும் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளும் அடங்குவர்.


