பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை (24) சரணடைந்துள்ளார்.
கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அர்ச்சுனா நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இதனையடுத்து அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து அர்ச்சுனா எம்.பி இன்று கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


