ஜூட் சமந்த
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் குழுக்களை குறிவைத்து மதன மோதக (லேகியம்) விற்பனை செய்த ஒருவரை ஏறாவூர் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஏறாவூர் நகரில் ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்யும் ஒரு வணிக நிறுவனத்தின் உரிமையாளரை காவல்துறை அதிகாரிகள் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரின் வணிக இடத்திலிருந்து 1250 மதன மோதக பொட்டலங்கள் (லேகியம்) போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட அந்த (லேகியம்) பொட்டலங்கள் சுமார் 19 கிலோகிராம் எடை கொண்டவை என தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரிடம் மதன மோதகாவை விற்பனை செய்வதற்கான உரிமம் இல்லாத நிலையில், போதைப்பாவனை நோக்கில் சந்தேக நபர் பல காலமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மதன மோதகாவை (லேகியம்) ரகசியமாக விற்பனை செய்து வந்ததாக சோதனை நடத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட மதன மோதகா பக்கட்டுகளும் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளது.
ஏறாவூர் காவல்துறையின் பதில் OIC, தலைமை ஆய்வாளர் பிரசாத் லியனகே உள்ளிட்ட அதிகாரிகள் குழுவால் இந்த சோதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.