“பாலஸ்தீனத்துக்கு சுதந்திரம் – யுத்தத்தை நிறுத்து” என்ற கருப்பொருளை வலியுறுத்தி, சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பாலஸ்தீன ஐக்கிய மக்கள் இயக்கம் ஆகியன இணைந்து கொழும்பில் இன்று (30) ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்தன.
பெருந்திரளான மக்களின் பங்கேற்பில் கொழும்பு கொம்பனித் தெருவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியாக அமைந்தது.
கொழும்பு 3, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கிச் சென்ற இப்பேரணியினர், “கொல்லாதே கொல்லாதே குழந்தைகளை கொல்லாதே”, “இனப்படுகொலையை நிறுத்து” என கோஷமிட்டும் பதாதைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பாலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இன அழிப்பில் இதுவரை 55ஆயிரத்திற்கும் அதிகளவான அப்பாவி பொது மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

