கொழும்பில் வொக்ஷால் வீதியில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயை அணைக்க 06 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை கொழும்பு ஆமர் வீதியில் உள்ள கடை வரிசையிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்ப கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், மின் கசிவுவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.