153 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய ஹஷிஸ் உள்ளிட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் கைது!
இலங்கை கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் கொழும்பு 12 பகுதியில் நேற்று 2025 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையில் 19 கிலோ 348 கிராம் ஹசீஸ், 348 கிராம் ஹெரோயின் மற்றும் 4 கிராம் ஐஸ் உடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடற்படையின் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் படி, கிழக்கு கடற்படை கப்பல் ரங்கல நிறுவனம் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்துடன் இணைந்து நேற்று இரவு கொழும்பு 12 பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியிலுள்ள சந்தேகத்திற்கிடமான வீடொன்று சோதனையிடப்பட்டது. குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 கிலோ 348 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள், 348 கிராம் ஹெரோயின் மற்றும் 4 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி 153 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானது என நம்பப்படுகிறது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபருடன் 19 கிலோ 348 கிராம் ஹஷிஸ், 348 கிராம் ஹெரோயின் மற்றும் 4 கிராம் ஐஸ் போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
