இம்முறை இடம்பெற்ற (2025) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் 14 மாணவர்கள் சித்திபெற்று புத்தளம் தெற்கு கோட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், புத்தளம் மதுரங்குளி பகுதியில் அமைந்துள்ள தமது நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை தமது பாடலைக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக பாடசாலை அதிபர் ஜனாப் M.Y. ஹுதைபா தெரிவித்தார்.
இதன் மூலம் புத்தளம் தெற்கு கோட்டத்தில் 131 என்ற வெட்டுப்புள்ளியை கடந்து, புத்தளம் புத்தளம் நல்லாந்தழுவை பாடசாலையைச் சேர்ந்த 14 மாணவர்கள் சித்தி பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் கெளவரத்தை பெற்றுக்கொடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதில் ரகுமான் பாத்திமா ரஹ்னா என்ற மாணவி அதிகூடிய புள்ளியாக 162 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார்.
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களை சிறப்பாக தயார்ப்படுத்திய ஆசிரியர்களுக்கு பாடசாலை சமூகம் நன்றி தெரிவித்துள்ளதுடன், பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களையும் பாராட்டியுள்ளனர்.
மேலும் பரீட்சியில் தோற்றி சித்திபெறத் தவறிய மாணவர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
