பூநகரி மன்னார் வீதியின் பூநகரி தம்பிராய் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த ஹய்யஸ் வேன் ஒன்று பூநகரி தம்பிராய் பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிளிலுடன் மோதிய குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் வீதியை கடக்க முற்பட்ட போது எதிரே வந்த வேன் விபத்தை தவிர்ப்பதற்கு வீதியின் மற்ற திசைக்கு திருப்பிய போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் முழுமையாக தீப்பற்றி எரிந்தது.
மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதில் ஹய்யஸ் வேனும் தீப்பற்றிக்கொண்டது.
விபதுக்குள்ளான குறித்த மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் பயணித்த நிலையில், எரி காயங்களுக்குள்ளானவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு சிறுமிகள் இரண்டு பெண்கள் ஒரு ஆண் உட்பட ஐந்து பேர் பூநகரி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக பூநகரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய ஹயஸ் வேன் வாகனத்தின் சாரதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
