ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக அதிகரித்துள்ளது.
பேருந்து சாரதி உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் இறந்த பலரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.