ஜூட் சமந்த
தெதுரு ஓயாவில் மூழ்கி காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூன்று பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து இன்று 5 ஆம் தேதி மாலை 5.00 மணியளவில் நிகழ்ந்தது.
கிரிபத்கொடவில் இருந்து வருகைதந்த இளைஞர்கள் குளிக்க சென்றபொழுதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சிலாபத்தில் உள்ள முன்னேஸ்வரம் கோயிலுக்கு வழிபட வந்த ஒரு குழு ஒன்று, இன்று 5 ஆம் தேதி மாலை சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயா பாலம் அருகே குளிக்கச் சென்றிருந்தது.
அந்த நேரத்தில், குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிலர் நீர்நிலையில் சிக்கி ஆபத்தில் மாட்டிக்கொண்டனர்.
ஆபத்தில் இருந்த வயதான பெண்களை அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் மீட்டனர்.
இருப்பினும், நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடுவதற்காக அப்பகுதி மக்கள் மாலை முழுவதும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
காணாமல் போன நால்வரில் மூவரின் உடல்களை உயிரிழந்த நிலையில் இதுவரை அப்பகுதி மக்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தப் பகுதியில் நீந்துவது ஆபத்தானது என்று கூறும் பலகைகள் வைக்கப்பட்டிருந்தாலும், இந்த எச்சரிக்கைகளை புறக்கணிப்பதால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.



