Tuesday, October 14, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 45 பேர் கைது!

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 45 பேர் கைது!

இலங்கை கடற்படையினர், மீன்வளம் நீர்வளத் துறை மற்றும் யாழ்ப்பாண சிறப்புப் படையுடன் இணைந்து, கடந்த பதினைந்து நாட்களில் சட்ட விரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர்.

கடந்த செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 07 வரை நாட்டின் கடல் எல்லைப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மூலம் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட, உரிமங்கள் இல்லாமல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாற்பத்தைந்து (45) சந்தேக நபர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

மேலும் இதனுடன் தொடர்புபட்ட பதினொரு (11) டிங்கி படகுகள், கெப் ரக வண்டியொன்றும் (01) இரண்டு (02) பல நாள் மீன்பிடி படகுகள் என்பன கைப்பற்றப்பட்டன.

அதன்படி, யாழ்ப்பாண நகர எல்லைகள் மற்றும் திருகோணமலை மலைமுந்தல், கொக்குத்துடுவாய், போல்டர் முனை, கோகிலாய், கதிரவேலி முனை, புடுவகட்டு, பாவுல் முனை, ஓட்டமாவடி, பிளான்டன் முனை, கல்குடா, கல்லராவ ஆகிய கடற்கரைகள் மற்றும் கடற்பரப்புகளை உள்ளடக்கிய, வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளால் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைகளில் மீன்பிடி படகுகள், ஒரு கெப் வண்டி மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

மேலும், இந்த நடவடிக்கைகளில் பிடிபட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் கெப் வண்டி ஆகியவை கிண்ணியா, முல்லைத்தீவு, குச்சவெளி, லங்காபட்டுன, கோட்பே மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular