சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லியனகேமுல்ல, சீதுவை பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கைது செய்வதற்கு சீதுவை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லியனகேமுல்ல, சீதுவை பிரதேசத்திற்கு காரில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் மூன்று நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து சீதுவை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் புகைப்படங்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபரின் விபரங்கள் :
1.பெயர் – மொஹொமட் அஸ்மன் ஷெரிப்டின்
2. தேசிய அடையாள அட்டை இலக்கம் – 911013363V
3. முகவரி – இரத்தொலுகம, கட்டுவன வீதி, ஹோமாகம
இந்த புகைப்படங்களில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் சீதுவை பொலிஸ் நிலையத்தின் 071 – 8591637 அல்லது 011 – 2253522 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.