பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.
ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (27) முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க முன்னிலையான அவர் கைதானார். கைதானவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.