புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சவரான பிரதேசத்தில் ரயிலில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரே இவ்வாறு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த முதியவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
முதியவரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.