ஜூட் சமந்த
சிலாபம், கஞ்சிக்குளிய புனித பெனடிக்ட் கல்லூரியின் அதிபராக ஒரு ரோமன் கத்தோலிக்க பாதிரியார் அல்லது கன்னியாஸ்திரியை நியமிக்கக் கோரி நேற்று 16 ஆம் திகதி சிலாபம் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஏராளமான கத்தோலிக்க பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் பெற்றோர்கள் குறித்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
சிலாபம் கார்மலைட் தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
118 ஆண்டுகள் பழமையான கஞ்சிக்குளிய புனித பெனடிக்ட் கல்லூரியில் இதுவரை கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் மட்டுமே அதிபர்களாக பணியாற்றியுள்ளனர் என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
பள்ளியின் முதல்வர் கன்னியாஸ்திரியாக இருக்கும்போது, பட்டம் பெற்ற மத சார்பற்ற ஒருவரை அதிபராக நியமிப்பதன் மூலம் அதிகாரிகள் தேவையற்ற சிக்கலை உருவாக்கியுள்ளனர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
தற்போதைய சூழ்நிலைக்கு ஒரே தீர்வு கத்தோலிக்க பாதிரியார் அல்லது கன்னியாஸ்திரியை பள்ளியின் அதிபராக நியமிப்பதே என்று போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



