ஜூட் சமந்த
லயன்ஸ் மாவட்ட 306 D கிளையினால், சிலாபம் பொது வைத்தியசாலையின் பயன்பாட்டிற்காக சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான கணினிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த உபகரணங்களை லயன்ஸ் மாவட்ட 306 D இன் ஆளுநர் லயன் போஸ்கோ சில்வா, சிலாபம் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுமித் அத்தநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்த நற்பணி நிகழ்வில் சிலாபம் பொது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் தினேஷ் கொக்கல, சலாபுர லயன்ஸ் கிளப்பின் தலைவர் நிமல் ஜயசூரிய, ரோயல் லயன்ஸ் கிளப்பின் தலைவி சேதனா தமேல் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
வைத்தியசாலையின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு லயன்ஸ் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சமூக சேவைத் திட்டம் வைத்தியசாலை நிர்வாகத்தினால் பெரிதும் பாராட்டப்பட்டது.


