Sponsored Advertisement
HomeLocal Newsசீரற்ற காலநிலையினால் 2242 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையினால் 2242 பேர் பாதிப்பு

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, நாடளாவிய ரீதியில் 11 மாவட்டங்களில், 594 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்களினால் இதுவரை 5 பேர் காயமடைந்துள்ளதுடன், 604 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

28 குடும்பங்களைச் சேர்ந்த 121 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, திருகோணமலை, களுத்துறை, கம்பஹா, கண்டி, குருநாகல், புத்தளம் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு இன்றும், நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வலய கல்வி பணிப்பாளர்களின் கோரிக்கைக்கு அமைய, இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version