Monday, February 24, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsசுற்றுலாவுக்கு ரயில் சேவைகள் ஆரம்பம்!

சுற்றுலாவுக்கு ரயில் சேவைகள் ஆரம்பம்!

சுற்றுலா ஆர்வத்தை மேம்படுத்துவதற்காக சில ரயில் சேவைகள் ஆரம்பம்

சுற்றுலா கைத்தொழில் முன்னேற்றுதல் மற்றும் தூரப் பயண சேவைக்காக புதிய புகையிரத சேவைகள் சிலவற்றை ஆரம்பிப்பதற்கு புகையிரதத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மலையகப் பாதையில் புகையிரதப் பயணிகளுக்கு மத்தியில் பிரபலமான, மிகவும் கவர்ச்சிகரம் மற்றும் அந்தப் புகையிரதப் பயணத்திற்கு காணப்படும் அதிக கேள்வி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி எல்ல – ஒடிசி – கண்டி மற்றும் எல்லா ஒடிசி – நானுஓயா என புதிய புகையிரத சேவைகள் இரண்டை பெப்ரவரி மாதத்தில் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பெப்ரவரி பத்தாம் திகதியிலிருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் எல்லா ஒடிசி – கொழும்பு புகையிரதத்திற்கு மேலதிகமாக பயணிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எல்ல – ஒடிசி – கண்டி புகையிரதம் பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் கண்டி மற்றும் தெம்மோதரை இடையே பயணிக்கக் கூடியதாக இருக்கும்.

எல்ல – ஒடிசி – நானுஓயா புகையிரதம் பெப்ரவரி 10 ஆம் திகதியில் இருந்து, திங்கட்கிழமைகள் தவிர்ந்த ஏனைய நாட்களில் நானு ஓயா மற்றும் பதுளை இடையே பயணிக்கவுள்ளது.

கொழும்பு மற்றும் பதுளை இடையே செல்லும் எல்ல ஒடிசி – கொழும்பு புகையிரதத்திற்கு மேலதிக பயணம் பெப்ரவரி 10ஆம் திகதியில் இருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொழும்பிலிருந்து புறப்படுவதற்கு மற்றும் பெப்ரவரி 11-ம் திகதியிலிருந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் பதுளையில் இருந்து புறப்படுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அது தவிர ஜனவரி 31 ஆம் திகதியில் இருந்து கொழும்பு மற்றும் காங்கேசந்துறை இடையேயான இரவு தபால் புகையிரத சேவை தினமும் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular