Friday, September 19, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsசேவை கொடுப்பனவுகளை இனி வீட்டிலிருந்தே செலுத்தமுடியும்!

சேவை கொடுப்பனவுகளை இனி வீட்டிலிருந்தே செலுத்தமுடியும்!

அரச நிறுவனங்களின் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை வீட்டிலிருந்தவாறு செலுத்தக்கூடிய முறைமை உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

எண்ணிமைப்படுத்தல் (Digitalization) மூலம் ஊழல் மோசடிகளைக் குறைக்க முடியும். எனவே வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களும் இந்தச் சேவைக்கு உள்ளீர்க்கப்படுவதை வரவேற்கின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக GovPay என்ற செயலியின் அறிமுகம் மற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை காலை (19.09.2025) வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில் தெரிவித்ததாவது,

இந்த அரசாங்கத்தின் பிரதான கொள்கைகளில் ஒன்றான எண்ணிமைப்படுத்தலின் ஒரு அங்கமாகவே GovPay அமைந்துள்ளது.

இன்று இலங்கை மின்சார சபையின் மின்பட்டியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பலரும் வீட்டிலிருந்தே செலுத்துகின்றார்கள். வீண் அலைச்சல், நேர விரயத்தை இல்லாமல் செய்தல் என்பவற்றையே பலரும் விரும்புகின்றார்கள். தற்போதுள்ள சூழலில் கணவன் மற்றும் மனைவி இருவருமே தொழில் செய்பவர்களாக உள்ளனர். அவ்வாறான நிலையில் அரசாங்க நிறுவனங்களின் சேவைகளுக்குரிய கட்டணங்களை அரச அலுவலகங்களுக்கு நேரில் சென்று குறித்த நேரத்துக்குள் செலுத்துவது என்பது மிகப் பெரிய சவாலாக மாறி வருகின்றது. எனவே, இவ்வாறு வீட்டிலிருந்தே எமது கொடுப்பனவுகளைச் செய்யக் கூடிய சேவைகள் மிக அவசியமானவையே.

இத்தகைய எண்ணிமைப்படுத்தல் ஊடான சேவைகளால் ஊழல் மோசடிகள் குறைவடையும். இந்தச் சேவைகள் வெளிப்படைத்தன்மையானது. தரவுகளை இலகுவாகவும் பெற்றுக் கொள்ள முடியும். இதன் ஊடாக நிர்வாகச் செலவீனங்கள் கூட அரச நிறுவனங்களுக்கு குறைவடையும். அத்துடன் அரச நிறுவனங்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்தவும் இது உதவும்.

இதுவரை 135 அரச நிறுவனங்கள் இந்தச் செயலியில் இணைந்துள்ளதுடன் அவற்றின் ஊடான 700 இற்கு மேற்பட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இதை வடக்கு மாகாணத்துக்குட்பட்ட அரச திணைக்களங்களில் நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தவேண்டும் என்றும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை இந்தச் சேவைக்குள் முதல் கட்டமாக உள்வாங்கும் நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு இது தொடர்பான தெளிவூட்டல் வழங்கப்பட்டதுடன் அவர்களுடனான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, லங்காபே நிறுவனத்தின் பிரதி தலைமை நிறைவேற்று அதிகாரி டினுக பெரேரா, லங்காபே நிறுவனத்தின் முதன்மை சேவை வழங்கல் அதிகாரி செல்வி துசா முகுந்தன், லங்கபே நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் சிவபிரசாந் ஆகியோர் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular