60 ஆண்டுகளுக்குப் பிறகு நவீன உலகிற்கு ஏற்றவாறு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை கடந்த 15 ஆம் தேதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதிக்கு அருகில் இருந்து நிகழ்வில் பங்கேற்ற ஒருவர் மீது கடந்த சில தினங்களாக சமூக ஊடகத்தில் அதிகமாக தேடப்பட்டுள்ளது.
அவர் வேறு யாருமல்ல, அப்போது ஜே.வி.பியின் மிக முக்கிய நபராக கருதப்பட்ட சேபால லியனகே ஆவார்.
1983 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் ஜே.வி.பி.யை தடை செய்ய நடவடிக்கை எடுத்தபோது, ஜே.வி.பி தலைவர் ரோஹண விஜேவீரவுடன் காட்டில் மறைந்திருந்த கட்சியின் ஆரமகால போராளியே இந்த சேபால என்ற சேபால லியனகே ஆவார்.
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையின்போது ஜானதிபதியுடன் மிக நெருக்கமாக இருந்த விடயம் அனைவரின் கவனத்தையும் ஈரத்ததுடன், அவர் குறித்து அதிகம் ஆராய தொடங்கினர்.
அந்த வகையிலே தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பேசும் பொருளாக மாறியிருக்கிறார் ஜனாதிபதியின் இடதுபுறத்தில் நின்ற கட்சியின் ஆரம்பகர்த்தா சேபால லியனகே.
இங்கே காட்டப்பட்டுள்ள குழு புகைப்படத்தில் ரோஹண விஜேவீரவின் வலதுபுறத்தில் உள்ளார். இது ஹென்றி வர்ணகுலசூரிய பேஸ்புக்கில் பதிவிட்ட பதிவிலே இவ்விடயம் கூறப்பட்டுள்ளது.

