‘அமெரிக்கா கட்சி’ என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், அமெரிக்கர்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் பரவலான வேட்பாளர்களை நிறுத்துவதற்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய இடங்களில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்சி, 2 அல்லது 3 செனட் இடங்கள் மற்றும் 8 முதல் 10 ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை மாவட்டங்களில் மாத்திரமே கவனம் செலுத்தும் என அவர் கூறினார்.
கட்சியின் நிர்வாகம், வேட்பாளர்கள், நிதி விபரங்கள் உள்ளிட்டவை இன்னும் வெளியிடப்படவில்லை எனவும், 2026 ஆம் ஆண்டு தேர்தல்களை இலக்குவைத்து இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
”மானியங்கள் இல்லையென்றால், மஸ்க் கடையை மூடிவிட்டு தென் ஆப்ரிக்காவுக்குத் திரும்ப வேண்டியிருக்கும். அதன் பின் ராக்கெட் ஏவ முடியாது. செயற்கைக்கோள் அல்லது மின்சார கார் உற்பத்தி இருக்காது” என டிரம்ப் கூறியிருந்தார். இந்த சூழலில் டிரம்பை எதிர்த்து எலான் மஸ்க் புதிய கட்சியை தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.