Monday, July 20, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsதப்பவே முடியாது! வரி ஏய்ப்பாளர்களுக்கு சிறை!

தப்பவே முடியாது! வரி ஏய்ப்பாளர்களுக்கு சிறை!

இலங்கையில் வரி ஏய்ப்பாளர்களுக்கு இனி ‘ரெட் அலர்ட்’!

நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழலில், வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரையும், அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகளைத் திட்டமிட்டுத் தவிர்ப்போரையும் பொறிவைத்துப் பிடிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பாரிய வலை வீசியுள்ளது. வணிகங்களை முறைப்படி பதிவு செய்யாதவர்கள் மற்றும் வருடாந்த வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்காமல் நழுவுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக திணைக்களம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கைகளைக் கட்டிய புதிய திருத்தச்சட்டம்!

கடந்த ஜூன் மாதம் நடைமுறைக்கு வந்த உள்நாட்டு இறைவரி திருத்தச்சட்டமானது, திணைக்களத்திற்கு கட்டுக்கடங்காத அதிகாரங்களை வழங்கியுள்ளது. இதன் மூலம், உரிய கால அவகாசத்திற்குள் வரிகளைச் செலுத்தாதவர்கள் மற்றும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திடம் தமது வணிகங்களைப் பதிவு செய்யத் தவறுபவர்களுக்கு எதிராக, எந்தவித தயக்கமுமின்றி நேரடியாகவே வழக்குத் தொடர முடியும். இந்தச் சட்ட மீறல்கள் அனைத்தும் இனி மன்னிக்க முடியாத குற்றங்களாகவே பார்க்கப்படும்.

வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்டறிந்ததும் திணைக்களம் சும்மா இருந்துவிடாது. முதற்கட்டமாக அவர்களுக்கு உத்தியோகபூர்வ அறிவித்தல் (Notice) அனுப்பி வைக்கப்படும். இந்த அறிவித்தல் கிடைத்த நாளிலிருந்து சரியாக 30 நாட்களுக்குள் தங்களது வரி நிலுவைகளைச் சரிசெய்யவும், கணக்குகளைச் சமர்ப்பிக்கவும் கால அவகாசம் வழங்கப்படும். இந்த 30 நாட்களுக்குள்ளும் திமிராகவோ அல்லது அலட்சியமாகவோ பதிலளிக்கத் தவறினால், விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும்.

குறித்த காலக்கெடுவுக்குள் இணங்க மறுப்பவர்கள் மீது நீதவான் நீதிமன்றில் சுருக்க விசாரணை நடத்தப்படும். விசாரணையின் இறுதியில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 400,000 ரூபாவிற்கு மிகாத அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமன்றி, 6 மாதங்கள் வரை சிறைக் கம்பிகளை எண்ண வேண்டிய நிலையும் ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில் அபராதமும் சிறைத்தண்டனையும் இணைந்தே வழங்கப்படும் என்பது தான் இதில் அதிரடியான விடயம்.

நேர்மையானவர்களுக்கு ஆபத்தில்லை!

இந்த அதிரடி நடவடிக்கைகள் குறித்துப் பேசியுள்ள திணைக்கள அதிகாரிகள், “இந்தச் சட்டம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழிப்போரை மட்டுமே குறிவைக்கிறது. சட்டத்திற்கு மதிப்பளித்து, அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு வழங்கும் சாதாரண நேர்மையான குடிமக்களை இது எவ்வகையிலும் பாதிக்காது” எனத் தெளிவுபடுத்தியுள்ளனர். இனிமேலும் வரியைத் தட்டிக்கழிக்கலாம் என நினைப்பவர்களுக்கு இது மரண அடியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular