இலங்கை கடற்படையினர், 2025 ஜூன் 29 ஆம் திகதி தலைமன்னார் பழைய பியர் கடற்கரைப் பகுதிக்கு அருகில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நானூற்று எண்பத்தைந்து (485) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இலங்கை கடற்படையினர், 2025 ஜூன் 29 ஆம் திகதி தலைமன்னார் பழைய பியர் கடற்கரைப் பகுதிக்கு அருகில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நானூற்று எண்பத்தைந்து (485) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி (01) படகைக் கைப்பற்றினர். குறித்த நேரத்தில், கடற்படை நடவடிக்கைகளின் போது கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 485 கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கலால் துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.