ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. ஆசிய நாடுகளில் புதிய கொரோனா தொற்று அலை பரவி வருகிறது’ என சுகாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், ஹாங்காங்கில் 31 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு கழிவுநீர் தான் காரணமாக கூறப்படுகிறது. அதேபோல, சிங்கப்பூரிலும் புதிய கொரோனா தொற்று தென்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், 14,200 பேருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இது, அதற்கு முந்தைய வாரத்தை விட 28 சதவீதம் அதிகம். தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 30 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதனால், ‘உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், பூஸ்டர் டோஸ் மருந்துகளை போட்டுக் கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீனாவிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. மே 4 வரையிலான ஐந்து வாரங்கள் சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.