நிறுவனங்கள் மற்றும் மருத்துவ அமைப்புகள் எவ்வளவு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டாலும், ஒவ்வொரு துறை மற்றும் மருத்துவ அமைப்பின் இறுதி இலக்காக குடிமகனை ஆரோக்கியமாக வைத்திருப்பதாக இருக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரே ஹோமியோபதி மருத்துவமனையான வெலிசறை ஹோமியோபதி மருத்துவமனையின் கண்காணிப்பு விஜயத்தைத் தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
வெலிசர அரச ஹோமியோபதி மருத்துவமனையானது குழந்தைகள் மற்றும் பெண்களின் நோய்கள், ஆஸ்துமா மற்றும் சுவாசக்கோளாறுகள், தோல்நோய்கள், வயிற்றுநோய்கள், நரம்பியல் நோய்கள், நாள்பட்ட தலைவலி, நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு நிலைகள், மூட்டு நோய்களுக்கு தினசரி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் குறைந்த செலவில் நோய்களிலிருந்து விடுபடவும், தடுக்கவும் எளிதான மற்றும் செலவு குறைந்த சிகிச்சை முறையாக ஹோமியோபதி மருத்துவத்தை பிரபலப்படுத்துவதற்காக, பல செயல்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஹோமியோபதி மருத்துவக்கவுன்சிலானது, ஹோமியோபதிக்கான ஒரே மருத்துவ அமைப்பாகும். மேலும் இது மருத்துவர்கள், மற்றும் செவிலியர்களின் பதிவு, ஹோமியோபதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல், மருந்துகளின் உற்பத்தி, இறக்குமதி, களஞ்சியபடுத்தல், விற்பனை மற்றும் ஹோமியோபதி நிறுவனங்களை கண்காணிக்கும் பொறிமுறையையும் மேற்கொள்கிறது.
200 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மையான வரலாற்றைக்கொண்ட ஒரு மருத்துவமுறையானது மற்றும் மேற்கத்திய மருத்துவத்தைத் தவிர உலகில் மிகவும் பிரபலமான மருத்துவமுறையான ஹோமியோபதி மருத்துவ சிகிச்சையின் தற்போதைய நிலைகுறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இலங்கையில் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை சேவைகளின் எதிர்கால இலக்குகள், ஹோமியோபதி மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு, உள்நோயாளர்களுக்கான சிகிச்சைபிரிவு, சிகிச்சை முறைகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
இந்த நிலைமையை கருத்திற்கொண்டு பக்கவிளைவுகள் ஏதுமின்றி நோய்களை குணப்படுத்தும் திறன்கொண்ட இந்த ஹோமியோபதி மருத்துவசிகிச்சை முறையை இலங்கையில் ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புதல், மருத்துவமனைகள் மற்றும் நடமாடும் கிளினிக்குகளுக்கு போதிய மருந்து கையிருப்பு வழங்குதல், ஆய்வக சேவைகளை நிறுவுதல், சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துதல், வெளி நோயாளர் பிரிவில் உள் நோயாளர் பிரிவை 50 படுக்கைகள்கொண்ட பிரிவாக தரம் உயர்த்துதல், துணை மருத்துவ சேவைகள், மருத்துவம் ஆய்வக சேவை, எக்ஸ்ரே மற்றும் பிசியோதெரபி சேவைகள் மற்றும் ஆலோசனை பிரிவுகளை நிறுவுதல், போதனா மருத்துவமனையாக தரம் உயர்த்துதல் போன்றவை கவனத்தில் எடுத்து கலந்துரையாட்பட்டது.
ஹோமியோபதி மருத்துவ சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் நாட்டில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியை நிறுவுதல், நாட்டில் ஹோமியோபதி மருந்துகளை உற்பத்தி செய்தல், ஒவ்வொரு மாகாணத்தையும் உள்ளடக்கிய ஹோமியோபதி வைத்தியசாலைகளை நிறுவுதல் என்பன எதிர்கால இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டன.
எதிர்காலத்தில், ஹோமியோபதி மருத்துவப்படிப்பை மேம்படுத்த இலங்கையிலிருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை இந்தியாவில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
எதிர்காலத்தில், ஹோமியோபதி மருத்துவப்படிப்பை மேம்படுத்துவதன் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.