சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக இன்று (30) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
என்னை நீக்க வழக்கு தொடரப்பட்டுள்ளது. நான் அதை நீதிமன்றத்தில் கொண்டு செல்வேன். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. அந்த கொள்கலன்கள் 323க்குள் என்ன இருந்தது என்பதற்கான பட்டியலை நான் உங்களுக்கு வழங்க முடியும். அது எங்கே போனது, எந்த நாட்டிலிருந்து வந்தது? ஆனால் அவர்கள் என்னை எம்.பி. இருக்கையிலிருந்து நீக்க மாட்டார்கள் என்பதை எனக்கு நிரூபிக்கச் சொல்லுங்கள். அதை நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன்.
இல்லையெனில், நான் வேறு நாட்டிற்கு சென்று அதை வெளியிடுவேன். அந்த 320க்குள் என்ன இருந்தது என்பதை நான் பயமின்றி கூறுவேன். முழு விவரங்களையும் என்னால் உங்களுக்குச் சொல்ல முடியும், ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. ஆனால் நான் கொல்லப்படுவேன் என்று பயப்படவில்லை. அவர்கள் என்னை மீண்டும் மீண்டும் தேவையற்ற வழக்குகளில் இழுக்கிறார்கள்.
இப்போது அவர்களிடம் பொலிஸின் அதிகாரம் உள்ளது. இப்போது அவர்கள் என்னை எம்.பி. பதவியிலிருந்து அகற்றுவதன் மூலம் உண்மை வெளிவருவதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். என தெரிவித்துள்ளார்.