Sponsored Advertisement
HomeLocal Newsதேசியப்பட்டியல் உறுப்பினருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

தேசியப்பட்டியல் உறுப்பினருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

புதிய ஜனநாயக முன்னணியின் இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்கவின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இன்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலில் ரவி கருணாநாயக்கவை சட்டவிரோதமாக தேசியப்பட்டியலில் உள்வாங்கியமையால், பங்காளிக் கட்சிகள் கூட்டணி மீது கொண்டிருந்த நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில், சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த குழுவின் உறுப்பினர்களாக,

  • சட்டத்தரணி குமார் துனுசிங்க
  • சட்டத்தரணி இந்திக்க வேரகொட
  • கலாநிதி விதானகே

குழுவின் செயலாளர் – சட்டத்தரணி யசஸ் டி சில்வா

மேற்படி ஆய்வுக் குழுவின் அறிக்கையை 3 வாரங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் அறிக்கையை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

Exit mobile version