(உடப்பு – க.மகாதேவன்)
தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றிய புளிச்சாக்குளம் உமர்பாரூக் பாடசாலை இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
அந்த வகையில் மெய்வல்லுனர் சுற்றுத்தொடரின் உயரம் பாய்தல் போட்டியில் புளிச்சாக்குளம் உமர்பாரூக் பாடசாலை மாணவி ஏ.டபில்யு.பி. தனுத்ரா இரண்டாம் இடத்தைப் பெற்று இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
இது உமர்பாரூக் பாடசாலை வரலாற்றில், ஒரே வருடத்தில் பெற்றுக்கொண்ட மூன்றாவது தேசிய வெற்றியுமாகும் என பாடசாலை அதிபர் எம்.யூ.எம். சாஜஹான் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பல சிரமங்களுக்கு மத்தியில் தேசிய போட்டிவரை சென்று கலந்துகொண்டு வெற்றி பெற்று பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்த இம் மாணவியை கெளரவப்படுத்தும் நிகழ்வு இன்று (7) பாடசாலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




