செயலாளர் பதவியில் பிரச்சினைகள் உள்ள 6 அரசியல் கட்சிகள் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளன.
இதன்படி 77 அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நவம்பர் 14-ம் திகதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடக்கூடிய அரசியல் கட்சிகள் மற்றும் அதற்கென ஒதுக்கப்பட்ட சின்னங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய லங்கா மகாசபா கட்சி, ஐக்கிய லங்கா பொதுஜன கட்சி, லங்கா மக்கள் கட்சி, இலங்கை முற்போக்கு முன்னணி மற்றும் ஈழவர் சனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.