புத்தளம் எருக்கலம்பிட்டி கிட்ஸ் கெம்பஸ் பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பு வைபவமும் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
எருக்கலம்பிட்டி யாங் யுன்னைட்டட் கழகத்தின் பூரண அனுசரனையில் இயங்கிவரும் எருக்கலம்பிட்டி கிட்ஸ் கெம்பஸ் மாணவர்களின் கலை நிகழ்வுகள் மேடையை அலங்கரித்தன.
புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த கலை நிகழ்வில் ஊரின் பெரும் திரலான மக்கள் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் மேடை நிகழ்வுகள் வருகை தந்தவர்களின் உள்ளங்களை குளிரச்செய்தன.
வர்ணமயமான மாணவர்களின் வினோத உடை நிகழ்வுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தத்துடன், நடன நிகழ்ச்சிகள் பெரும் பாரட்டையும் பெற்றன.
2024ஆம் ஆண்டு பாலர் பாடசாலையை நிறைவுசெய்த மாணவர்களுக்கு சான்றிதல்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஏனைய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை அதிபர் SM ஹுசைமத், முன்னாள் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் SM ரிஜாஜ், கல்விமான்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.