புத்தளம் பிரதேச சபை ஊடாக புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியின் குறுக்கு வீதிகளுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் பொரள் மண் இடப்பட்டு வீதி புனரமைப்பு பணிகள் மிகவும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
புத்தளம் பிரதேச சபை உறுப்பினரும், அபிவிருத்தி குழுவின் தலைவருமான ஜனாப் ஷாஹின் ரீஸா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த பொரள் மண் இடப்பட்டு வீதிகளை செப்பனிடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியில் குன்றும் குழியுமாக உள்ள சுமார் 4 குறுக்கு வீதிகள் முதற்கட்டமாக இனம்காணப்பட்டு அதன் புனரமைப்பு பணிகளே இவ்வாறு இடம்பெற்று வருகின்றன.
சுமார் 100 மீட்டர் நீளமுள்ள நான்கு குறுக்கு வீதிகளுக்கு பொரள் மண் இடப்பட்டு வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருவதுடன், மற்றுமொரு 50 மீட்டர் நீளமுள்ள குறுக்கு வீதிக்கான பொரள் மண் இடப்பட்டு வீதி புனரமைப்பு பணிகள் மிகவும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
குறித்த குறுக்கு வீதிகளுக்கு சுமார் 31 லோடு பொரள் மண் பறிக்கப்பட்டு இன்றுடன் மூன்றாவது நாளாகவும் வீதி புனரமைப்பு பணிகள் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
மேலும் தேவையுடைய மீதமுள்ள குறுக்கு வீதிகளுக்கு பொரள் மண் பறிக்கப்பட்டு வீதி புனரமைப்பு பணிகள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் எனவும், வீதி மின் விளக்குகள் திருத்தும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் ஜனாப் ஷாஹின் ரீஸா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இதேவேளை புத்தளம் எருக்கலம்பிட்டியில் அண்மையில் 15 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தார் வீதி ஒன்று புத்தளம் பிரதேச சபை தலைவரினால் மக்களின் பாவனைக்கு திறந்துவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


