Wednesday, May 14, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeERUKKALAMPIDDYநாகவில்லுவில் இம்முறையும் கூட்டு குர்பானி!

நாகவில்லுவில் இம்முறையும் கூட்டு குர்பானி!

அல் வஹ்தா நலன்புரிச் சங்கத்தின் ஆதரவில் நடைபெறும் கூட்டு உழ்ஹிய்யா (குர்பானி) விநியோகம் தொடர்பாக,

புத்தளம் எருக்கலம்பிட்டியில் வருடா வருடம் இடம்பெறும் கூட்டு குர்பானி (உழ்ஹிய்யா) கடமை, இம்முறையும் அல் வஹ்தா நலன்புரி அமைப்பினால் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்னுலாப்தீன் அபுல்ஹைர் தெரிவித்துள்ளார்.

அல் வஹ்தா நலன்புரி அமைப்பினால் புத்தளம் எருக்கலம்பிட்டியில் நீண்ட காலமாக கூட்டு குர்பானி (உழ்ஹிய்யா) கடமை பல சிரமங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டு வருவதினாலும், ஊரில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நேர்த்தியாக குர்பானி இறைச்சி பகிரப்பட்டு வந்தமையாலும் ஊர் மக்கள் அனைவரும் அல் வஹ்தா நலன்புரி அமைப்பை இன்றுவரை பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இம்முறையும் குறித்த கூட்டு குர்பானி (உழ்ஹிய்யா) கடமையை நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளதாகவும், உழ்ஹிய்யா பிராணியான மாடுகளை நேரடியாக தர விரும்புபவர்கள் தந்துதவுமாறும், அறுப்பு கூலியாக ரூபாய் 13,000/- தை செலுத்துமாறும் குறித்த அமைப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாடுகளை நேரடியாக பெற்றுத்தர முடியாதவர்கள் ஒரு மாட்டுக்கான முழுத்தொகை மற்றும் அறுப்புக் கூலியுடன் 190.000/- ரூபாவை செலுத்த முடியும் எனவும், 7 பேர் சேர்ந்து கூட்டாக வழங்க விரும்பினால் ஒரு பங்கிற்கான தொகை 27,000 ரூபாவை செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் உழ்ஹிய்யா கடமையை கூட்டாக நிறைவேற்ற பூரண ஒத்துழைப்பு வழங்கி எமது மக்கள் நன்மையடைய பாரிய பங்களிப்பு செய்தமைக்காக குர்பானி கடமைக்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் தமது தூய்மையான நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அல் வஹ்தா நலன்புரி அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்ஷா அல்லாஹ் வழமை போன்று இம்முறையும் உழ்ஹிய்யாக் கடமையை கூட்டாக செய்ய முன்வந்துள்ளமையால் தங்களின் உழ்ஹிய்யா பிராணியான மாடுகளை ரூபாய் 13,000 கூலியுடன் நேரடியாக தந்துதவுமாறும் அல்லது அதற்கான பணம் கூலியுடன் 190.000 ரூபா அல்லது 7 பேர் சேர்ந்து கூட்டாக வழங்க விரும்பினால் ஒரு பங்கிற்கான பணம் 27,000 ரூபாவை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 31.05.2025 திகதிக்கு முன்னர் சங்க உறுப்பினர்களிடம் ஒப்படைத்து இச்சேவைக்கு உதவுமாறும் அல் வஹ்தா நலன்புரி அமைப்பு வேண்டிக்கொண்டுள்ளது.

President AL HAJ. S.A.ABULHAIR (072 702 2475) | Secretary B.HISMY (071 481 4149) | Treasurer J.M.RISMY (C.C) (071 444 3360) | Vice President K.RAMEES (070 480 9451) | Asst. Secretary B.M. RISMY (071 610 5490)

Members
AL HAJ MOULAVI A.H. INULLAH (NULARI) M.B.A (077 609 4797)
M.A.C. ZIYATH (TEACHER) (071 520 7848)
A.M. RASLAN (077 799 2217)
A.H.M. WAZIFF (0096550523832)
T.M. RIYASDEEN (077 583 5343)

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular