அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் புத்தளம் கிளை ஏற்பாட்டில் இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் இன்று 18.01.2025 சனிக்கிழமை புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
புத்தளம் எருக்கலம்பிட்டி ஜம்மிய்யதுல் உலமா மற்றும் எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா புத்தளம் கிளையின் பூரண அனுசரணையுடன், புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலையின் ஒத்துழைப்புடனும் குறித்த இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இவ் வைத்திய முகாமில் ஆயுர்வேத வைத்திய குழாம் மூலம் பொதுமக்களுக்கு வைத்திய இலவச வைத்திய ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன் தொற்று நோய்கள் தொடர்பாக நோயாளிகளுக்கு விசேட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு விஷேட மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதுடன், முன்னூறுக்கும் மேற்பட்ட மக்கள் குறித்த வைத்திய முகாமில் இலவச மருத்துவ உதவிகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இலவச வைத்திய முகாமிற்கு ஊரின் சிவில் அமைப்புக்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் தமது பூரண பங்களிப்பை வழங்கி இருந்தமை சிறப்பம்சமாகும்.