புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடந்த மூன்று திங்களாக இடம்பெற்ற (12,13,14) கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி திகா53 அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
நீண்ட விடுமுறையை முன்னிட்டு மின்னொளியில் இரவு நேர போட்டிகளாக மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் சுமார் 20யிற்கும் அதிகமான அணிகள் பங்குபற்றின.
இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பரவிவரும் போதை பாவனையிலிருந்து விடுபடச் செய்யவும், கரப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவித்து விளையாட்டின் பக்கம் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கிலும் ஜனாப் BM ஹிலாலி மற்றும் நாசர் இன்ஸார் ஆகியோரின் ஏற்பாட்டில் குறித்த சுற்றிப்போட்டி நடைபெற்றது.
ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற குறித்த போட்டியில் பல அணிகளை துவம்சம் செய்து ரக்கிட்ட மற்றும் திகா53 அணியினர் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர்.
மிகவும் சூடாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரக்கிட அணியை வீழ்த்தி திகா53 அணியினர் வெற்றி வாகை சூடினர்.
சாம்பியன் கிண்ணத்துக்கான அனுசரணையை அல்ஹாஜ் CM அஸீஸ் அவர்களும் இரண்டாம் இடத்தை பிடித்த அணிக்கான வெற்றிக்கிண்ணத்திற்கு ஜனாப் ஹனீபா சஜித் அவர்களும் அனுசரணை வழங்கி இருந்தனர். மேலும் ஏனைய பரிசில்களுக்கு ஊரின் முக்கியஸ்தர்கள் பலரும் அனுசரணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.